பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

Batticaloa Eastern Province Russia
By Laksi Jan 10, 2025 05:36 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) - பாசிக்குடா (Pasikuda) கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (10) காலை இடம்பெற்றுள்ளதாக  கல்குடா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில், ரஸ்ய (Russia) நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் ஓ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

உயிரிழப்பு

குறித்த நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் சம்பவதினமான இன்று காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடல் மூழ்கி தத்தளித்துக் கொண்டதை அங்கு இருந்த கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு | Russian Tourist Has Died In Batti Pasikuda Beach

இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கடற்படையினர் அவர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

மேலதிக விசாரணை

அத்தோடு, உயிரிழந்தவரின்  சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு | Russian Tourist Has Died In Batti Pasikuda Beach

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW