இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Crime Harini Amarasuriya
By Laksi Jan 10, 2025 05:01 AM GMT
Laksi

Laksi

 இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கும், வன்முறைகளுக்கும் இடமில்லை என  பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, இன, மத வன்முறைகளை மீண்டும் தூண்ட முயல்வோர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்துக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

நீதிமன்றம் தண்டனை

அத்தோடு, எவராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை | Jail For Those Try To Incite Ethnic Violence Pm

மேலும், அப்படியானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனையை தேசிய மக்கள் சக்தி அரசு வரவேற்கும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் பல பகுதிகளில் இன்று முதல் பலத்த மழை

நாட்டில் பல பகுதிகளில் இன்று முதல் பலத்த மழை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW