மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் இரண்டு, மூன்று நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்படும் என தமது அரசாங்கத்தில் எவரும் கூறவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி (Kumara Jayakodi) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) நேற்று (9) நாடாளுமன்றில் கேள்வி எமுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி மின் கட்டணத்தை குறைக்க முடியாது.
மின்கட்டமைப்பு அபிவிருத்தி
நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதை விட ஒரு மின் அலகுக்கு வாரியம் அதிக பணத்தை செலவிடுகிறது.
மின்சாரக் கட்டணத்தை 37 வீதத்தால் அதிகரிக்க மின்சார சபை அண்மையில் முன்மொழிந்திருந்த போதிலும், கட்டணத்தை அதிகரிக்காமல் அரசாங்கம் சமாளித்து வருகின்றது.
3 வருட காலத்துக்குள் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், மின்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |