உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

Food Shortages Sri Lanka Sri Lankan Peoples Rice
By Laksi Jan 10, 2025 05:08 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு,பொதுமக்கள் தமது உணவுத் தேவைகளுக்காக தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்ப அலகுகள் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஆய்வு 

“உணவு அடிப்படையிலான தகவல் மற்றும் செயல் வலையமைப்பு” (FLAN Sri Lanka) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல் | Familes Debt Ridden For Foods In Lanka

அமைப்பின் ஆராய்ச்சி அதிகாரி ஷெஹாரி விஜேசிங்கவினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு (2024) மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ மற்றும் மஹரகம பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் பல பகுதிகளில் இன்று முதல் பலத்த மழை

நாட்டில் பல பகுதிகளில் இன்று முதல் பலத்த மழை

நிரந்தர வருமானம்

இந்த கணக்கெடுப்புக்காக, மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து 1352 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களில் 34.3 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல் | Familes Debt Ridden For Foods In Lanka

மொத்த மாதிரியில் 62 சதவீதம் பேருக்கு நிரந்தர வருமானம் இல்லை என்பதும், சுமார் 57 சதவீதம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்பதும் தெரியவந்தது.

இந்த மாதிரியில் உள்ள 35 சதவீத வீட்டுக்காரர்களின் மாத வருமானம் 49,589 ரூபாவாகும்.

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

அரிசி நுகர்வு

கணக்கெடுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அவர்களின் வருமானத்தில் 42 சதவீதத்தை உணவுக்காக செலவழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல் | Familes Debt Ridden For Foods In Lanka

அதே நேரத்தில் 6 சதவீதம் சுகாதாரத்திற்காகவும் அதேபோல் கல்விக்கு 9 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட வீட்டுக்காரர்களில் 60 சதவீதம் பேர் புகைபிடித்தல் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட  குழுவில் 31.7 சதவீதம் பேர் உணவு வாங்க கடன் பெற்றுள்ளதாகவும், தங்க ஆபரணங்களை அடகு வைத்து, சொத்துக்களை விற்று கடனுக்கு பணம் எடுத்தல் போன்றவற்றின் மூலம் உணவுக்கு பணம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விலை அதிகரித்துள்ள நிலையிலும் மக்கள் அரிசி நுகர்வை குறைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW