கடல் கொந்தளிக்கும் அபாயம்!
By Rakshana MA
நாட்டில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில், இன்று(18) முதல் நாளை மறுதினம் வரையில், மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |