மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று(Porativu Pattu) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், ஒரு வீட்டின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததினால் அங்கிருந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
மினி சூறாவளி
இதன்போது வீடு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.
இதேபோன்று அப்பகுதியில் மேலும் இரண்டு வீடுகள் மரம் முறிந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு அதன் ஊடாக பிரதேச செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


