உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்
காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில், உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen)விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் நேற்றையதினம் (1) மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனுதாபம் தெரிவிப்பு
இந்தநிலையில், சம்மாந்துறையைச் சேர்ந்த மத்ரஸா மாணவர்கள், சாரதி மற்றும் அவர்களுடன் பயணித்த மேலும் ஒரு நபர் உட்பட உயிர்நீத்த 6 பேர்களின் ஜனாஸா வீடுகளுக்கும் அவர் நேரில் சென்று அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இதன்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |