வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னர் எலிக்காய்ச்சல் (Rat fever) பரவும் அபாயம் உள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே வைத்தியர் த.வினோதன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எலிக்காய்ச்சல்
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மை நாட்களாக இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர்.
மேலும் , இவர்கள் வெள்ள நீரில் பயணம் செய்திருந்தனர். இதனால் வெள்ளநீர் மூலம் எலியின் சிறுநீர் கலந்து பக்ரீறியா தொற்று ஏற்பட்டு குறித்த நோய் ஏற்படுகிறது.
எனவே கடுமையான காய்ச்சல் மற்றும் கால் நோ, கண்சிவப்பு போன்ற அறிகுறி காணப்பட்டால் மருத்துவ உதவியைப்பெற்று எலிக்காய்ச்சலில் இருந்து பாதுகாக்குமாறு வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |