இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ பதவிப்பிரமாணம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Supreme Court of Sri Lanka
By Laksi Dec 02, 2024 08:05 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ (Murdu Fernando) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும், இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராகவும் முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இணைகிறார்.

எரிபொருள் விலைத்திருத்தம் : அதிருப்தியில் மக்கள்

எரிபொருள் விலைத்திருத்தம் : அதிருப்தியில் மக்கள்

சிரேஷ்ட நீதிபதி

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமான பதவிக்கு அவரது பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ பதவிப்பிரமாணம் | Murdu Fernando As 48Th Chief Justice Of Sri Lanka

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசதரப்புச் சட்டத்தரணியாக இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ள முர்து பெர்னாண்டோ, 2018 மார்ச் மாதம் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

முர்து பெர்னாண்டோ சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியதுடன், உயர் நீதிமன்றத்தின் தற்போது பணியாற்றும் சிரேஷ்ட நீதிபதி இவராவார்.

இந்தநிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டணம் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மின்சாரக் கட்டணம் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஒழிக்கப்பட வேண்டிய இலஞ்சம் துணிந்து செயல்படும் அரசாங்கம் : முனீர் முழப்பர்

ஒழிக்கப்பட வேண்டிய இலஞ்சம் துணிந்து செயல்படும் அரசாங்கம் : முனீர் முழப்பர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW