எரிபொருள் விலைத்திருத்தம் : அதிருப்தியில் மக்கள்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Rakshana MA Dec 02, 2024 06:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டும், மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலும், சமகால பொருளாதார நிலவரங்கள் தொடர்பிலும் மக்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

எரிபொருள் விலைக்குறைப்பிலும் பார்க்க அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பையே எதிர்ப்பார்பதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வறுமை நிலையில் உள்ள மக்களிடத்தில் மண்ணெண்ணெய்யின் பயன்பாடு அதிகமாக காணப்படுவதால், இந்த விலை அதிகரிப்பானது அந்த மக்களுக்கு பாரிய சுமையாகவே அமைந்துள்ளது.

இந்த நிலையில், எரிபொருளின் விலையில் தற்போது ஏற்படுத்தப்பட்ட மாற்றம் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டை கீழுள்ள காணொளியில் காணலாம்...

நிந்தவூரில் நடைமுறைக்கு வந்த தாய் - சேய் நலத்திட்டம்

நிந்தவூரில் நடைமுறைக்கு வந்த தாய் - சேய் நலத்திட்டம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW