அம்பாறையில் முதலையிடம் சிக்கிய நபரின் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Ampara
Climate Change
Eastern Province
By Laksi
அம்பாறை (Ampara) -பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைப் பாறை பகுதியில் கடந்த (28) ஆம் திகதி முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பொத்துவில்-பச்சரச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்பு
குறித்த நபர் முதலைப் பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் எருமைகளை அழைத்துச் சென்ற போது முதலை இழுத்து சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காணாமல்போனவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்த நிலையில், கடற்படையினரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |