பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Pakistan Indonesia World
By Fathima Dec 11, 2025 01:51 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியா ஜனாதிபதி பிரபாவோ சுபியாண்டோ அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் சென்றார்.

2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா ஜனாதிபதி ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும்.

7 ஒப்பந்தங்கள்

இஸ்லாமாபாத் சென்ற அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து | Pakistan Indonesia Sign 7 Agreements

பின்னர் இருநாடுகளுக்கு இடையே இராணுவம், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பாக 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பாகிஸ்தான் நாட்டின் மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் இந்தோனேசியா சென்று பட்டப்படிப்பு படிப்பது போன்றவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தோனேசியாவை மருத்துவ அரங்கில் உயர்த்துவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த வைத்தியர்கள் குழுவினர் அங்கு சென்று அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.