அல்லாஹ்வின் குடும்பத்தினர்
ஹஜ்ரத் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”மனிதர்களில் அல்லாஹ்வுக்கு சொந்தமான சில குடும்பத்தினர் இருக்கின்றனர்” என நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, யாரஸூலல்லாஹ் அவர்கள் யார்? என ஸஹாபாக்கள் கேட்டதற்கு, அவர்கள் குர் ஆன் உடையவர்கள், அவர்கள் தாம் அல்லாஹ்விற்குரியவர்கள், அவனுக்கு சொந்தமானவர்கள் என பதிலளித்தார்கள்.
விளக்கம்
எந்நேரமும் பரிசுத்த குர்ஆன்ஷரீப்பில் ஈடுபட்டு, அதனுடன் விசேஷமான தொடர்புடையவர்கள் குர்ஆன் உடையவர்கள் என கூறப்படுவர், இத்தகையோர் அல்லாஹ்வின் குடும்பத்தினர் என்பது தெளிவான விஷயமாகும்.
எந்நேரமும் பரிசுத்த வேதத்துடன் தொடர்புடையவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் எந்நேரமும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது என்ற கருத்து முன்னால் கூறப்பட்டுள்ளது, எவர் குர்ஆனின் மூலம் அல்லாஹ்விடம் நெருக்கத்தை பெற்றுக் கொள்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் குடும்பத்தினராக அவனுக்கு சொந்தமானவராக ஆகிவிடுகிறார்.
இது எவ்வளவு மகத்தான சிறப்பு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சிறிதளவு உழைப்பினாலும் சிரமத்தினாலும் அல்லாஹ்விற்குரியவர்களாக ஆகிவிடுகின்றனர், அவனுக்கு சொந்தக்காரர் என்ற சிறப்பையும் பெற்றுவிடுகின்றனர்.
