பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு: 6 வீரர்கள் பலி
Pakistan
Taliban
By Fathima
கைபர் பக்துங்க்வா மாகாண சோதனைச்சாவடியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது துங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் 6 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் தலிபான்கள் அதனை மறுத்து வருகின்றனர்.