கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Ministry of Education Weather Sri Lankan Schools
By Fathima Dec 10, 2025 09:42 AM GMT
Fathima

Fathima

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ குறிப்பிட்டுள்ளார்.

பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும்போது சீருடைகள் கட்டாயமாக்கப்படாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தளர்வான கொள்கைகள்

இதற்கமைய, கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தளர்வான கொள்கைகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Ministry Education Announcement

பேரிடருக்கு பிறகு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, சபரகமுவ மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் எனவும், இருப்பினும், மூன்று மாகாணங்களைச் சேர்ந்த 147 பாடசாலைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள ஊட்டச்சத்து திட்டமும் 16 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும், அதை மேலும் விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.