பிற்பகல் 1 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Sri Lankan Peoples Climate Change Weather
By Fathima Dec 12, 2025 05:25 AM GMT
Fathima

Fathima

நாட்டில் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பலத்த மழை

வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் மாத்தளை, குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 1 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! | Thunderstorms At Some Places After 1 Pm

நாட்டின் ஏனைய பகுதிகளில், சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.