இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அனுமதி: வெளியாகிய அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Rice
By Rakshana MA
இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அனுமதியை சுங்கத் திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சுங்கப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் திரு.சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இன்று (26) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககும் போது குறிப்பிட்டுள்ளார்.
அரிசி இறக்குமதி
இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகளை விரைவாக விடுவிக்க உணவு பரிசோதகர்கள் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சுங்கத்தினால் விசேட முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இறக்குமதியை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அருக்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |