அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினால் நட்டம்..!

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Rice
By Rakshana MA Dec 14, 2024 10:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரசாங்கத்தினால் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையின் காரணத்தால் தாம் நட்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 

போக்குவரத்து செலவு, பொதிச் செலவு என்பனவற்றை அவதானிக்கும் போது 10 முதல் 15 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் நட்டம் ஏற்படுகிறது. ஆகவே, அரிசி விற்பனையால் எந்தவித பயனும் ஏற்படாது.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் திகதி தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் திகதி தொடர்பில் வெளியான தகவல்

விலையில் மாற்றம்...

இதேவேளை, அரிசியைப் பதுக்கி வைத்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், அதிகூடிய விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி நுகர்வோர் அதிகார சபை முன்னெடுக்கும் சுற்றி வளைப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அரிசி தொடர்பில் 200க்கும் அதிகமான சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினால் நட்டம்..! | Rice Price In Sri Lanka 2024

இந்த நிலையில், 2,300 மெற்றிக் டன் அரிசி ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி முதல் தனியாருக்கு அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

விரைவில் அந்த அரிசியை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

சுற்றுலாத்துறையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

சுற்றுலாத்துறையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW