நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 25, 2024 10:45 AM GMT
Laksi

Laksi

 நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த எண்ணிக்கை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 0.85 சதவீதமாகப் பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்

எனினும் கடந்த 21ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு | Rejected Votes In Sl Presidential Election

இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை, குறித்த ஆய்வின் பின்னர் கண்டறிய முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW