சூரிய மின்சார அலகுகளுக்கான கொள்முதல் செலவு குறைப்பு!

Trincomalee Sri Lankan Peoples Dollars
By Rakshana MA Jan 21, 2025 07:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலையின்(Trincomalee) சம்பூரில் செயற்படவுள்ள இலங்கை - இந்திய கூட்டு முயற்சியான சூரிய மின்சார உற்பத்தி நிலையம், இலங்கையின் தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு அலகு ஒன்றுக்கு, 5.97 அமெரிக்க சென்ஸ்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்யும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த மின்சார உற்பத்தியில் அலகு ஒன்றுக்கு இதற்கு முன்னதாக சுமார் 7.00 அமெரிக்க சென்ஸ்களுக்கு இந்த விற்பனை செய்வதற்கு இணங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பின்னர் அது 6.69 அமெரிக்க சென்ஸ்களாக குறைக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் : ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் : ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

அலகுகளுக்கான கொள்முதல் செலவு 

எனினும், சில நாட்களுக்கு முன்னர் அதனை 5.97 அமெரிக்க சென்ஸ்களில் பெறுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்

சூரிய மின்சார அலகுகளுக்கான கொள்முதல் செலவு குறைப்பு! | Reduction In Purchase Cost Of Solar Power Units

இந்த நிலையில், அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய வெப்ப மின் கழகத்திற்கும் இடையேயான கூட்டு முயற்சியின் கீழ், சம்பூரில் 135 மெகாவோட் சூரிய மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளது.

இலங்கை மின்சார சபை கூடுதல் கடனில் சிக்க விரும்பாததால் இதற்கு முதலீடுகளை அழைத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதில் கொள்முதல் விலை முக்கியமானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கிழக்கில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்

கிழக்கில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்

சம்மாந்துறையில் அதிகரிக்கும் வெள்ளம் : விவசாய நிலங்கள் பாதிப்பு

சம்மாந்துறையில் அதிகரிக்கும் வெள்ளம் : விவசாய நிலங்கள் பாதிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW