சம்மாந்துறையில் அதிகரிக்கும் வெள்ளம் : விவசாய நிலங்கள் பாதிப்பு
சம்மாந்துறை(Sammanthurai) பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட நைனாகாடு சாவாற்றின் இறக்கம் உடைப்பெடுத்துள்ளமையினால் பல விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சாவாறு வைத்தியசாலை பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வடசேலியா விவசாய நிலம் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பாகும் அதிகாரிகள்
இது தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சாவாறு இறக்கம் உடைந்த நிலையில் காணப்பட்டது.
இது உரியமுறையில் சீரமைக்கப்படாமையினால் இன்று இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இதற்கு அதிகாரிகளே முழுப் பொறுப்பு. அதுமட்டுமின்றி இவர்களுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |