அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து!

Trincomalee Sri Lanka Accident
By Kiyas Shafe Dec 25, 2025 07:12 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று (25) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.​

விபத்து

அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருகோணமலை நோக்கிப் பயணித்த குறித்த சொகுசு பேருந்து, இன்று காலை 7:00 மணியளவில் மஹிந்தபுர சந்திக்கு அருகில் சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து! | Akkaraipattu Trincomalee Luxury Bus Accident

பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.​

விபத்தின் போது பேருந்தினுள் இருந்த பயணிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சேருநுவர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவருக்கும் பாரிய உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.