திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய சிவப்பு நிற நண்டுகள்

Trincomalee Tourism Eastern Province
By Laksi Aug 10, 2024 12:49 PM GMT
Laksi

Laksi

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் சிறு சிவப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

சிவப்பு நிற நண்டுகள்

சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறான சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய சிவப்பு நிற நண்டுகள் | Red Crabs Washed Ashore On Trinco Beach

இதேவேளை, இந்த பிரதேசத்திற்கு சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்று உள்ளது.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை நகர செயலாளர் உறுதியளித்துள்ளார்.

திருகோணமலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் செயலமர்வு

திருகோணமலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் செயலமர்வு

திரியாய் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு

திரியாய் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW