திருகோணமலை கப்பல் துறை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Trincomalee SL Protest Eastern Province
By Laksi Aug 10, 2024 08:49 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை - கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் அல்அக்சா ஜூம் ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் இருந்து அஷ்ரப் நகர் வயல் வீதி வரை பேரணியாக சென்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க மற்றுமொரு கட்சி தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க மற்றுமொரு கட்சி தீர்மானம்

மக்கள் கோரிக்கை

இதன்போது, வேண்டாம் வேண்டாம் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வேண்டாம், எங்களுடைய விவசாய காணிகள் எங்களுக்கு வேண்டும் போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் | Demonstration By People Of Trinco Shipping Sector

அத்தோடு,  இலங்கை துறைமுக அதிகார சபையினர் தங்கள் பகுதிக்குள் வந்து விவசாயம் செய்ய விடாது தடுத்து நிறுத்துவதுடன் எந்தவித கட்டிடமோ குடியிருப்புக்களை அகற்றுமாறும் வற்புறுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இப்பிரதேச மக்களின் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வைக்குமாறும் இதன்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

திருகோணமலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் செயலமர்வு

திருகோணமலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் செயலமர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW