புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு
புத்தளம் - பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் பீடி இலை பொதிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பீடி இலைகள் லொறியில் கடத்திச் செல்வதாக தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று (23) குறித்த லொறி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, லொறியை நிறுத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இதன்போது, குறித்த லொறியை சோதனையிட்டபோது சுமார் 60 மூடைகளில் 1535 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பீடி இலைகள் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை புத்தளம் கலால் வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை புத்தளம் கலால் வரித் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக இதன்போது தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |