காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 27, 2024 08:15 AM GMT
Laksi

Laksi

கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பீடி இலைகள் நேற்று (26) எருமதீவு கடற் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் கீழ் கற்பிட்டி கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட 41 மூடைகளை பரிசோதனை செய்துள்ளனர்.

ஜீப் வண்டி மோதி குடும்பஸ்தர் பலி: சாரதி கைது

ஜீப் வண்டி மோதி குடும்பஸ்தர் பலி: சாரதி கைது

பீடி இலைகள் மீட்பு

இதன்போது, குறித்த 41 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 1276 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு | Recovery Of Beedi Leaves In Kalpitiya

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தில் கணித பாட ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது

புத்தளத்தில் கணித பாட ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது

சட்ட நடவடிக்கை

இதேவேளை, இந்த வருடம் ஜூலை மாதம் வரை 27330 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு | Recovery Of Beedi Leaves In Kalpitiya

மேலும், இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW