புத்தளத்தில் கணித பாட ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 27, 2024 07:21 AM GMT
Laksi

Laksi

புத்தளம் பிரதான பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தயாராகும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தயாராகும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கத்திக்குத்து

குறித்த மாணவன் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த போது, ​​பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் ஆசிரியர் அவரிடம் கேட்டதையடுத்து மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் வயிற்றில் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தில் கணித பாட ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது | Student Stabbed A Teacher In Puttalam

இதனையடுத்து, கத்திக்குத்துக்கு இலக்கான ஆசிரியர் கீழே விழுந்ததாகவும், அந்த மாணவன் கத்தியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பாணின் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாணின் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொலிஸார் விசாரணை

புத்தளத்தில் கணித பாட ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது | Student Stabbed A Teacher In Puttalam

இந்தநிலையில், குறித்த மாணவன் கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW