மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

Batticaloa Climate Change Eastern Province
By Laksi 3 months ago
Laksi

Laksi

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளை சீர் செய்து திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதிப் புனரமைப்பு பணியானது நேற்று (20) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கபட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் போர் தீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு-போரதீவு பிரதான வீதியே இவ்வாறு புனரமைப்பு செய்யப்படுகின்றது.

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

புனரமைப்பதற்கான பணிகள்

இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதிக்கு குறுக்காக பாயும் நவகிரி குளம் அதிகளவில் பெருக்கெடுத்தமையால் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு | Reconstruction Of Flood Affected Streets In Batti

காபெட் வீதிகளை உடைத்து அருகில் காணப்படும் வயல் நிலங்களுக்கு படை படையாக தூக்கி வீசப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியை வெகு விரைவில் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியினால் தினமும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் செல்வதானால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் மோசடிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் மோசடிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW