உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Kandy Anura Kumara Dissanayaka Local government Election
By Laksi Dec 21, 2024 07:10 AM GMT
Laksi

Laksi

2025 ஆம் ஆண்டின் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அதற்காக வேட்புமனுக்களை மீள அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை நேற்று (20) பிற்பகல் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடாத்துவதற்கு வேட்புமனுக்கள் அழைக்கப்பட்டன.ஆனால் அன்று இருந்த கட்சிகள் இன்று இல்லை. சில கூட்டணிகள் உடைந்துள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Local Elections In Next Year Prsident Anura

எனவே அந்த வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களை அழைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கடந்த தினம் அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை பெற்று, வேட்புமனுக்களை இரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளோம்.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

வேட்புமனு

இது ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, மீண்டும் வேட்புமனுக்களை அழைத்து, உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Local Elections In Next Year Prsident Anura

அதே போல், மாகாண சபை தேர்தலும் அடுத்த வருடத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW