தனியார் பேருந்துகளில் இடம்பெறும் மோசடிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

Sri Lanka Private Bus Owners Association Srilanka Bus
By Laksi Dec 21, 2024 08:14 AM GMT
Laksi

Laksi

தனியார் பேருந்துகளில் இருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா வரையான தொகை கப்பமாக அறவிடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன, கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் பேரூந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் செயற்பட்ட நேரக் கண்காணிப்பாளர்கள் நூறு ரூபா அல்லது இரு நூறு ரூபா வரையான தொகையையே கப்பமாக அறவிட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

கப்பம் அறவீடு

இப்போது அந்தத் தொகை ஐநூறு ரூபா அல்லது ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது பேருந்து நிலையங்களுக்கு வெளியில் நிற்கும் சிலரும் தனியார் பேருந்துகளில் இருந்து கப்பம் அறவிடுகின்றனர்.

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் மோசடிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் | Excise Duty 1 Crore Rupees Per Day Private Buses

அதேபோன்று சில இடங்களில் காலையில் ஒருவரும், மாலையில் இன்னொருவருமாக இருப்பதால் ஒரே இடத்தில் இரண்டு ​பேருக்கு கப்பம் கொடுக்க வேண்டியுள்ளது.

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

வேண்டுகோள் 

இவ்வாறாக நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா வரையான தொகை தனியார் பேருந்துகளில் இருந்து கப்பமாக அறவிடப்படுகின்றது.

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் மோசடிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் | Excise Duty 1 Crore Rupees Per Day Private Buses

தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு இதற்கொரு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கெமுணு விஜேரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தளத்தில் கிணற்றில் இருந்து காட்டு யானையின் சடலம் மீட்பு

புத்தளத்தில் கிணற்றில் இருந்து காட்டு யானையின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW