வைத்தியசாலை உதவியாளர்களை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கத் தீர்மானம்! வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் தற்போதுள்ள வைத்தியசாலையின் உதவியாளர்கள் இனிமேல் CAREGIVER என்ற அதிகாரப்பூர்வ பட்டத்தைப் பயன்படுத்தச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் செவிலியர் ஊழியர்களின் சீருடையில் CAREGIVER சின்னம்(LOGO) சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவிச் சேவகர்கள்
மேலும், இந்த விடயம் தொடர்பாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்த இலங்கை சுதந்திர செவிலியர் சங்கத்தின் தலைவரும் இலங்கை சுதந்திர தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான டபிள்யூ.ரோய் டி மெல்,
இந்த அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டின் செவிலியர்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களாக மதிக்கப்படுவார்கள் எனச்சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |