சம்மாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக புகலிடம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக டீ.எஸ்.சேனநாயக்க(D.S.Senanayeka) சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மல்கம்பிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் நேற்று(19) சம்மாந்துறை தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் பாதுகாப்பு
இவர்களை பார்வையிட தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் என் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |