வாக்குறுதிகளை நிறைவேற்ற திணரும் அநுர அரசாங்கம்! சொந்த செலவில் பாதை அமைக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
நாவலப்பிட்டி - வட்டவளை பிரதேசத்திலுள்ள இன்ஸிரா தோட்டத்தில் வாழும் மக்களின் தேவைக்காக தனது சொந்த நன்கொடையின் கீழ் பாதை ஒன்றை அமைக்க திட்டமிட்டிருப்பதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்(Rauf Hakeem) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை இன்று(18) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அபிவிருத்தி திட்டங்களை எதிர்க்கட்சியில் இருந்தாலும் சொந்த முயற்சிலாவது செய்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எங்கள் பொறுப்பு.
அதிகளவான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு வந்த புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகள், இன்று விலைவாசிகளை கட்டுப்படுத்த முடியாமல் காற்றில் பறக்கின்றதை அவதானிக்க முடிகின்றது.
மேலும், தற்போது நாட்டிலும் வரிச்சுமைகளை குறைப்பது தொடர்பில் எந்த வித முன்னேற்றமும் காணப்படவில்லை இருப்பினும் எதிர்வரும் காலங்களில் வரிகள் அதிகரிக்ககூடும் எனவும் வரவு செலவு திட்டத்தில் யோசனைகள் சமர்ப்பிக்கப்படும் என யூகிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்னார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்த கருத்துக்கனை இங்கே பார்வையிடலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |