நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

Colombo Sri Lanka Police Investigation Crime Law and Order
By Laksi 3 months ago
Laksi

Laksi

கொழும்பு (Colombo) - உடுகம நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது,  தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் உடுகம மற்றும் நாகொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

மேலதிக விசாரணை

இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, கைதிகள் இருவரும் வழக்கு விசாரணைக்காக காலி சிறைச்சாலையிலிருந்து உடுகம நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம் | Two Prisoners Who Were Taken To Court Escaped

பின்னர், கைதிகள் இருவரும் வழக்கு விசாரணையை முடித்துவிட்டு காலி சிறைச்சாலைக்கு மீண்டும் செல்வதற்காக சிறைச்சாலை பேருந்தில் ஏற முயன்ற போது சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை

மட்டக்களப்பில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள் அதிகம்: பிரபு எம்.பி சுட்டிக்காட்டு

மட்டக்களப்பில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள் அதிகம்: பிரபு எம்.பி சுட்டிக்காட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW