யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Disease
By Laksi Dec 17, 2024 07:49 AM GMT
Laksi

Laksi

யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் (Rat fever) இதுவரை  85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயமானது அவர் நேற்று (16) வெளியிட்ட  செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 11 பேரும் இந்நோய்க்காகச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு: சஜித் அணியின் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு: சஜித் அணியின் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

எலிக்காய்ச்சல் 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Rat Fever Increase Patients In Jaffna

சனிக்கிழமை (14) இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதுவரை யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்

குருதி மாதிரிகள்

எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Rat Fever Increase Patients In Jaffna

இவர்களில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழக்கும்:சஜித் பகிரங்கம்

ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழக்கும்:சஜித் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW