புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்
10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvi Sally) தலைமையில் இன்றைய (17.12.2024) நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உத்தியோகபூர்வமாக சபையில் அறிவித்துள்ளார்.
புதிய சபாநாயகர்
இதனையடுத்து, புதிய சபாநாயகராக, ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) முன்மொழிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, அசோக சபுமல் ரன்வல (Asoka Sapumal Ranwala) சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, அசோக ரன்வல, டிசம்பர் 13ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |