ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழக்கும்:சஜித் பகிரங்கம்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sajith Premadasa National People's Power - NPP
By Laksi Dec 17, 2024 07:16 AM GMT
Laksi

Laksi

ஒரு மாதத்துக்குள் சபாநாயகரை இழந்த அரசு, ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது உறுதி என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், போலி வாக்குறுதிகளை வழங்கி போலிக் கல்வித் தகைமைகளுடன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு மாதத்துக்குள் சபாநாயகரை இழந்துள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு: சஜித் அணியின் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு: சஜித் அணியின் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

அநுர அரசு

அதியுயர் சபையில் போலிக் கலாநிதிப் பட்டத்துடன் சபாநாயகர் கதிரை அலங்கரித்தவர், ஒரு மாதத்துக்குள் உண்மை நிலைமை வெளியில் தெரியவர பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழக்கும்:சஜித் பகிரங்கம் | Sajith Sure That Anura Government Will Lose Power

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இனியாவது விழிப்படைய வேண்டும். ஒரு மாதத்துக்குள் சபாநாயகரை இழந்த அரசு, ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது உறுதி. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி விரைவில் மலரும் என தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்

கல்முனையில் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கிய நிறுவன பிரதானிகளுக்கு விருது

கல்முனையில் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கிய நிறுவன பிரதானிகளுக்கு விருது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW