யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை..!
யாழ்ப்பாண(Jaffna) மாவட்டத்தில், எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரையிலும் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன்(A.Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மேலும், இந்நோய் நிலைமை காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 7 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 6 இறப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும், ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.
நோயின் தாக்கம்
தொடர்ந்தும், இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன குறிப்பிடுகையில்,
இதேவேளை, திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டது.
அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்புகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |