கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் செயலமர்வு
Trincomalee
Sri Lanka
Eastern Province
Media
By Rakshana MA
கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது இன்று(15) திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.
புலனாய்வின் விளக்கம்
இதன்போது, புலனாய்வு அறிக்கையிடல் என்றால் என்ன?, புலனாய்வு அறிக்கையிடல் செய்வதற்கு எவ்வாறு தகவல் சேகரிப்பது?, எவ்வாறு நடு நிலையாக அறிக்கையிடல் செய்வது? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இச் செயலமர்வில், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |