நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்

Sri Lanka Eastern Province M.L.A.M. Hizbullah
By Rakshana MA Dec 15, 2024 05:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு அவரை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாராட்டு நிகழ்வானது நேற்று(14) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

உரை..

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அர்ப்பணிப்புகள் மற்றும் எதிர்கால முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான விடயங்கள் உள்ளடங்களாக தலைமையுரையினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் எம்.ஏ.சீ.எம். சத்தார் நிகழ்த்தினார்.

நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் | Hizbullah Donate Memorial Gift To Kattankudy Mos

இந்த கௌரவிக்கும் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

சம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மாவடிப்பள்ளியில் கண்பார்வையிழந்த மாணவனின் குர்ஆன் மனனம்

மாவடிப்பள்ளியில் கண்பார்வையிழந்த மாணவனின் குர்ஆன் மனனம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery