மாவடிப்பள்ளியில் கண்பார்வையிழந்த மாணவனின் குர்ஆன் மனனம்
மாவடிப்பள்ளியில் புனித அல்-குர்ஆனை மனனம் செய்த கண்பார்வையற்ற இளைஞன் அப்துல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் நேற்று(13) இடம்பெற்றுள்ளது.
கண்பார்வையற்ற ஹாபிழ்
மாவடிப்பள்ளியைச் சேர்ந்த, பிறவியிலேயே தனது இரு கண்பார்வையை இழந்து இந்த உலகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த உலகம் என்னை பார்க்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு அல்-குர்ஆனை மனனம் இட்டு ஹாபிழாக பட்டம் பெற்றுள்ள அல் ஹாபிழ் அப்துல் அமீர் அப்துல்லாஹ் ஆவார்.
அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜும்ஆவை தொடர்ந்து மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.ஐ.எம். மனாப் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கண்ணியமிக்க உலமாக்கள், மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், புத்தி ஜீவிகள், மசூரா சபை உறுப்பினர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |