முறைப்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள நிஹால் தல்துவ

Police spokesman Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Rakshana MA Nov 07, 2024 12:03 PM GMT
Rakshana MA

Rakshana MA

குற்றங்களை அறிவிக்க மக்களுக்காக கொடுக்கப்ட்ட அவசர இலக்கத்திற்கு 100க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 18 முறைப்பாடுகள் மாத்திரமே உண்மையானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தகவல் வெளியிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அவசர இலக்கத்தின் மூலம் பொய்யான தகவல் பரிமாற்றம்

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜூலை மாதம் போதைப்பொருள் குற்றங்கள், தவறான செயல்கள், பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பில் முறையிடுவதற்கு இவ் இலக்கமானது அறிமுகப்படுத்தப்படிருந்தது.

இதன் மூலம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 100கும் மேற்பட்ட தகவல்கள் பொய்யென அவர் உறுதி செய்துள்ளார்.

முறைப்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள நிஹால் தல்துவ | Rare True Complaints Police Chief Nihal Thalduva

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அண்மையில் சோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த எம். பி. யின் வீட்டில் அவ்வாறான வாகனம் எதுவும் காணப்படவில்லை என சுட்டிகாட்டியுள்ளார்.

போலியான அழைப்பு

இதனை தொடர்ந்து பிரபல வர்த்தகர்கள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் தங்கியுள்ள சொகுசு கட்டடத் தொகுதியில் வாகனம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

முறைப்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள நிஹால் தல்துவ | Rare True Complaints Police Chief Nihal Thalduva

அன்றைய தினமும் அவ்வாறான வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், இதுபோன்ற பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW