க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Sri Lankan Peoples Education
By Rakshana MA Nov 07, 2024 10:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

பரீட்சைக்கான அனுமதி அட்டை

மேலும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Gce A L Exam Dates For 2024 Announced

தபால் மூலம் அனுமதி அட்டையினை பெறாத தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்நிலையில், குறித்த அனுமதி அட்டையில் திருத்தங்கள் காணப்படுமாயின் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை திருத்தங்களைச் செய்யலாம் எனினும் பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிரடியாக குறைவடைந்த தங்க விலை

அதிரடியாக குறைவடைந்த தங்க விலை

லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW