லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

Sri Lanka Tourism Sri Lanka United Kingdom Tourism Tourist Visa
By Rakshana MA Nov 07, 2024 07:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

2024ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுலா பயணிகளால் கவரப்பட்ட நாடாக இலங்கை தீவு தங்க விருதை பெற்றுக் கொண்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தரப்படுத்தலில் இலங்கை 8வது இடத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

இந்து சமுத்திரத்தின் முத்து

தற்போது இலங்கையை Most Desirable Island என பெயரிடுவதற்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..! | Sl Named Best Tourist Destination Uk Gold Award

இலங்கையானது இந்து சமுத்திரத்தின் முத்து என்ற வகையில், உலக மக்களிடையே பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் அங்கீகாரம்

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாக இலங்கையில் உள்ள புராதன இடங்கள் குறிப்பாக சிகிரியா, தம்புள்ள குகைகள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை புராதன இடிபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..! | Sl Named Best Tourist Destination Uk Gold Award

இந்நிலையில் விருதுகளில், இரண்டாவது இடத்தை தாய்வானும், மூன்றாவது இடத்தை போர்ட்டோ ரிகோவும் பெற்றுள்ளது.

சர்வதேச ரீதியாக 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தரப்படுத்தலுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வாக்களித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் ஆபத்து அதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் ஆபத்து அதிகரிப்பு

சந்திரிக்காவின் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

சந்திரிக்காவின் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW