ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka C. V. Vigneswaran
By Harrish Sep 01, 2024 02:03 PM GMT
Harrish

Harrish

ஜனாதிபதி வேட்பாளர்கள் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

புதிய அரசியலமைப்பு 

குறித்த அறிக்கையில்,

"ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே தற்போதைய அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை | Ranil Sajith S Election Manifestos

13 ஆவது திருத்த சட்டம் பொலிஸ், காணி மற்றும் நிதி ஏற்பாடுகளுடன் முழுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்று இருவருமே உறுதியளிக்கவில்லை. இது அதிகார பகிர்வு தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

புதிய அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருவரும் எந்த விதமான விபரங்களும் இன்றி மொட்டையாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை | Ranil Sajith S Election Manifestos

புதிய அரசியலமைப்பில் தமிழ் தேசிய பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படும் என்று எந்த யோசனைகளையும் இருவரும் துளியளவும் குறிப்பிடவில்லை" என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

சம்மாந்துறையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் குழுக்களின் கூட்டம்

சம்மாந்துறையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் குழுக்களின் கூட்டம்

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு !

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு !