அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்து கலந்துரையாடிய ரணில்

Colombo Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 28, 2024 11:15 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலானது  நேற்று (27) மாலை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கடந்த கோவிட் வைரஸ் பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

பொருளாதார மீட்சி 

அத்தோடு, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மௌலவிமார்களுக்கு எடுத்துரைத்த ரணில், அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை கோருவதற்காகவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்து கலந்துரையாடிய ரணில் | Ranil Meet For Jamiyyathul Ulama Council

மேலும், பலஸ்தீன நாடு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், அதற்காக தான் தொடர்ந்தும் குரல்கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

ரணிலுக்கு ஆசி

இந்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி எம்.பி, பைசர் முஸ்தபா, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷேக் அக்ரம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷேக் ஏ. ஏ. அஹமட் அஸ்வர், உப தலைவர் அஷ்-ஷெய்க் எச். ஒமர்தீன்,  உள்ளிட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்து கலந்துரையாடிய ரணில் | Ranil Meet For Jamiyyathul Ulama Council

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு மௌலவிமார் தமது ஆசிகளை தெரிவித்தனர். 

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானோர் தொடர்பில் வெளியான தகவல்

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானோர் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW