நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy 2 days ago
Rukshy

Rukshy

நாட்டின் பல பகுதிகளில்  இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஸா மக்களுக்காக துஆ..!

காஸா மக்களுக்காக துஆ..!

இடியுடன் கூடிய மழை 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை | Rainy Weather In Many Parts Of The Country

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள  போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

பொலிஸாருக்கு எதிராக தேசபந்துவின் மனைவி முறைப்பாடு

பொலிஸாருக்கு எதிராக தேசபந்துவின் மனைவி முறைப்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW