வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

Election Commission of Sri Lanka Money Local government Election
By Rakshana MA Mar 19, 2025 12:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை(20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்தநிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (19) நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது.

அதற்கமைய நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் செயற்பாடுகள் கடந்த 3 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது.

இலங்கையில் புதிய சமூக வலைத்தளம் அறிமுகம்

இலங்கையில் புதிய சமூக வலைத்தளம் அறிமுகம்

வேட்புமனு தாக்கல்

கடந்த 17 ஆம் திகதி முதல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் உரிய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் தொடர்பில் முக்கிய அறிவித்தல் | Deadline For Deposit Payment Has Passed To Elction

இந்தநிலையில், நேற்றைய தினம் மொத்தமாக 21 கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா மீதான தாக்குதல்கள் 'ஆரம்பம் மட்டுமே' நெதன்யாகுவின் எச்சரிக்கை

காசா மீதான தாக்குதல்கள் 'ஆரம்பம் மட்டுமே' நெதன்யாகுவின் எச்சரிக்கை

சம்மாந்துரையில் மீண்டும் நாய்களுக்கு தடுப்பூசி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சம்மாந்துரையில் மீண்டும் நாய்களுக்கு தடுப்பூசி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW