பொலிஸாருக்கு எதிராக தேசபந்துவின் மனைவி முறைப்பாடு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Deshabandu Tennakoon
By Aanadhi Mar 19, 2025 11:47 AM GMT
Aanadhi

Aanadhi

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் (18) இரவு அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீடு பொலிஸாரினால் சோதனையிடப்பட்டது.

இதன்போது அங்கிருந்த 1009 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

எனினும் தங்கள் வீட்டை சோதனையிட பொலிஸார் நீதிமன்றக் கட்டளை எதனையும் பெற்றிருக்கவில்லை என்றும் அத்துமீறி வீட்டில் நுழைந்து சோதனையிட்டுள்ளதாகவும் தேசபந்துவின் மனைவி தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

பொலிஸாருக்கு எதிராக தேசபந்துவின் மனைவி முறைப்பாடு | Deshabandhu S Wife Files Complaint Against Police

அது தொடர்பில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக அவர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் ​மேற்கொண்டுள்ளார்.