இரவு நேர விருந்துகளில் வானொலிகளை பயன்படுத்த காலஎல்லை! ஏற்படவுள்ள திருத்தம்
Sri Lanka Politician
Vijitha Herath
Sri Lankan Peoples
By Rakshana MA
இரவு விருந்துகளை நடாத்துவதில் இரவு 10 மணி வரை மாத்திரம் வானொலி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லையில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை காலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இரவு விருந்தில் இரவு 10 மணிக்குப் பின்னர் வானொலி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு பொலிஸார் அனுமதிக்காததால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
மேலும், இது பல வருடங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனவும், அந்தத் தீர்ப்பை திருத்தி முன்னோக்கிச் செல்வதாக நம்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |